ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுவதாக கூறப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அதன் பின்னர், பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரை ஆபரணதங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனையாகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி கிராமுக்கு ரூ.76.20-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.76,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.