fbpx

Gold Rate : இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை.. ஒரு சவரன் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதியான இன்று தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது. சென்னையில் (மார்ச் 1) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.105-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிறு கிழமை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினமும் அதே விலை தொடர்கிறது.

Read more:’தேர்வில் வென்று சிகரம் தொட வேண்டும்’..!! 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!!

English Summary

Gold Rate: Today there is no change in the price of gold.. Do you know how much a sawan costs?

Next Post

இன்றே கடைசி..!! India Post-இல் 21,413 காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!!

Mon Mar 3 , 2025
India Post has announced a recruitment notification to fill 21,413 vacant posts, and today is the last day to apply for the job.

You May Like