சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.
நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5542 என விற்பனையாகி வந்த நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி அதே ரூ. 5545 என விற்பனையாகிறது. அதேபோல் ஆபரண தங்கம் ஒரு சவரன் 44,336 என நேற்று விற்பனையான நிலையில் இன்றும், ரூ.44,360 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் சென்னையில் ரூ.62,018 என்று விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 800 என விற்பனையான நிலையில், இன்று 200 ரூபாய் உயர்ந்து போல உயர்ந்து ரூ.79,000 என விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.79.00-க்கு விற்பனையாகிறது.