சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது. நவம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை நடப்பு வாரத்தில் சற்று குறைந்தே வருகிறது.
இன்றைய விலை நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,885-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, மாற்றமின்றி இருந்து வருகிறது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை, ரூ.67,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.