fbpx

Good Friday 2025: சிலுவையில் வெளிப்பட்ட அன்பின் ரகசியம்.. புனித வெள்ளி நமக்கென்ன சொல்லுகிறது?

இன்று கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கடைபிடிக்கும் புனித வெள்ளி (Good Friday), இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், கருணையையும் நினைவுகூரும் ஒரு புனித நாளாகும். இந்த நாளின் புனிதத்தன்மை, வெறும் ஆன்மிக அடையாளத்துக்கு மேலாக, மனிதத்துவத்தின் மகத்துவத்தையும் சிந்திக்க வைக்கும் ஒரு ஞாபகமாக மாறியுள்ளது.

புனித வெள்ளியின் பின்னணி: மனித குலத்தை பாவத்தில் இருந்து மீட்பதற்காககவும், இறை வாழ்வை மனிதர்களுக்கு அளிப்பதற்காகவும் பல துன்பங்களை அனுபவித்த இயேசு சிலுவையில் அறைந்து உயிர் துறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்நீத்த நாளை நினைவுகூரும் விதமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இது பெரிய வெள்ளி, கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது துக்கம், தவம், உண்ணாவிரதம் ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒரு நாளாகும்.

இயேசு கிறிஸ்து மக்களுக்கு எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார். நோய்களை குணமாக்கினார். பேய்களை விரட்டினார். இதனால் ஏராளமான மக்கள் அவரை பின்பற்றினர். மற்றொரு சாரர் அவரை வெறுத்தனர். அவருடைய வீழ்ச்சிக்காக காத்திருந்த சிலர் அவரை நம்ப மறுத்தனர். 30 வெள்ளி காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டி கொடுத்தார் யூதாஸ். அன்பு, மன்னிப்பு, அமைதி ஆகியவற்றை தன் வாழ்க்கையில் கடைபிடித்த இயேசு கிறிஸ்துவை, மக்கள் பொய் குற்றஞ்சாட்டி மரண மேடைக்கு அனுப்பினர்.

ஆளுநர் பிலாத்து இயேசுவை குற்றமற்றவர் என அறிவித்தார். ஆனால், விடாப்பிடியாக மக்களில் சிலர் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். யூத ஆட்சியாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு எல்லாவிதமான உடல், மன சித்திரவதைகளையும் கொடுத்து, பின்னர் அவரை சிலுவையில் அறைந்தனர். அன்றைய நாள் வெள்ளிக்கிழமை. அதனால் தான் இதை புனித வெள்ளி என்கிறார்கள்

புனிதமான, பாவமன்னிப்பு நிகழும் நாள் என்பதால் இது “Good Friday” என அழைக்கப்படுகிறது. இயேசுவின் சிலுவை மரணமே மனித குலத்துக்கான மீட்பு பாதை எனக் கருதப்படுவதால், இந்தத் துக்க நாளும் “நற்கிழமை” என்ற பெயரை பெற்றது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இதுதான் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் சிலர் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு இருப்பார்கள்.

புனித வெள்ளி அன்று தேவாலங்களில் துணியால் மூடி, துக்கம் அனுசரிப்பார்கள். தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு மனம் மாறும் நாளாக புனித வெள்ளி பார்க்கப்படுகிறது. இந்நாளில் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்து மனமுருகி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். இது துக்க நாள் என்பதால் இயேசுவின் தியாகத்தை போற்ற வேண்டும். கருப்பு ஆடை அணிந்து மௌனத்தை கடைபிடிக்க வேண்டும். தேவாலய நடைமுறைக்கு ஏற்ப உண்ணாவிரதம், மதுவிலக்கு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இன்றைய தினம் வெறும் ஒரு மதநாளாக இல்லாமல், மனிதம் சார்ந்த எண்ணங்களை மீண்டும் விழுங்க வைக்கும் ஒரு சிந்தனைக் கட்டடமாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் இரக்கம், பொறுமை, எளிமை, சேவை, மற்றும் சகிப்புத்தன்மை என்ற மொழிகளை வாழ்வின் நிஜ உச்சரிப்பாக மாற்ற வேண்டிய தருணமிது. புனித வெள்ளி நாம் அனைவரும் எதற்காக வாழ்கிறோம், எதற்காக வாழவேண்டும் என்பதற்கான ஒரு ஞாபகக் கண்ணாடி.

Read more: Gold Rate: நான் போகிறேன் மேலே மேலே.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் இதோ..

English Summary

Good Friday 2025: The secret of love revealed on the cross.. What does Good Friday tell us?

Next Post

துபாயின் பர்ஜ் கலிபாவைவிட பெருசு!. ​ 157 மாடிகள் கொண்ட உலகின் புதிய மிக உயரமான கோபுரம்!. சவுதியின் மெகா திட்டம்!

Fri Apr 18 , 2025
Dubai's Burj Khalifa is bigger than it is! The world's new tallest tower with 157 floors! Saudi's mega project!

You May Like