fbpx

குட்நியூஸ்!. ரூ.400-ல் 1,000 கி.மீ தூர ரயில் பயணத்துக்கு இலக்கு!. ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!.

Ashwini Vaishnaw: ரூ.400க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ., வரை ரயிலில் பயணிக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே நோக்கம் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரும் 5 ஆண்டுகளில் ரயில்வே துறை மேலும் மாற்றம் அடையும். வந்தே பாரத், நமோ பாரத், கவச் ரயில் பாதுகாப்பு என மாற்றங்கள் இருக்கும். ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம் இது. தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

அதிக பாதுகாப்பு, தொழில்நுட்பம், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை என்பதே தற்போதைய இலக்கு. ரூ.400க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ., வரை பயணிக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே நோக்கம். அதனை மையப்படுத்தி வரும் 6 ஆண்டுகளில் 3,000 ரயில் சேவைகள் தொடங்கும் திட்டம் உள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ., புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரான்ஸ் நாட்டின் மொத்த ரயில் வழித்தடத்தை விட இது மிக அதிகம். ரயில்வே பாதுகாப்பு படையின் மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

Readmore: பல் உடைந்துவிட்டதா?. கவலை வேண்டாம்!. மீண்டும் வளரச்செய்யும் புதிய மருந்து கண்டுபிடிப்பு!.

English Summary

Good news! 1,000 km train travel destination for Rs.400! Railway Minister announcement!.

Kokila

Next Post

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பண்டிகை காலத்தை முன்னிட்டு 4% அகவிலைப்படி உயர்வு..!!

Sat Oct 5 , 2024
Ahead of the festive season, the Sikkim state government has announced a good news for the employees by increasing the allowance.

You May Like