fbpx

குட் நியூஸ்..!! ஜூன் மாதத்திற்குள் 10,000 பேருக்கு அரசு வேலை..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேரை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியில் பல லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் தரப்பில் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. பல அரசு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ தேர்வுகளின் மூலம் 5,860 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதேபோல் குரூப் 4இல் சுமார் 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இப்படி பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567 பேருக்கு அரசுப்பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையின் படி, குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகள் மூலம் பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது. முதலில் குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த முறை நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் குரூப் 4 தேர்வில் இந்தாண்டு இடம் பெற்றுள்ளன. குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

இதேபோல் வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியிட்டு, அதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா..?சட்டப்பேரவையில் ரகசியமாக பேசிய தங்கமணி-வானதி சீனிவாசன்..!!

Wed Feb 14 , 2024
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக சபை நடவடிக்கைகளின் போதே ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக இருந்தது அதிமுக. ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை தொடர்ந்து இழிவாக விமர்சித்து வந்தார். இதனால் அதிமுகவினர் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர். மேலும், 2026 […]

You May Like