fbpx

குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால், இந்தாண்டு வைகாசி விசாகம் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி காலை வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவார்கள். இதனை முன்னிட்டு ஜூன் 2ஆம் தேதியான இன்று முழுவதும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஏழைகளுக்கு அதிகாரம்...! அனைவரும் இணைவோம், உயர்வோம்...! பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சி நிறைவு...!

Fri Jun 2 , 2023
பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் சமூக நலன் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. எவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தாக்கமும் பயன்களும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றடைவதை உறுதிப்படுத்தவும் 2014 முதல் பல வகையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட […]

You May Like