மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை மின்சார வாரியம் எளிமைப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை மின்சார வாரியம் எளிமைப்படுத்தியுள்ளது. முன்பு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும் என்றால், அதன் ஜெராக்ஸ் அப்லோட் செய்ய வேண்டும். இதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால், இனி அது தேவையில்லை. வெறும் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்தால்போதும். அதன்பின் மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ பதிவிட்டால், அனைத்தும் அப்டேட் ஆகிவிடும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.