நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதமரின் உஜ்வாலா யோஜனா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தங்கள் பகுதிக்கு அருகில் சென்று வாங்கலாம்.
இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. சிலிண்டருக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது. ஒருவேளை நீங்கள் வேறு ஒரு இடத்திற்கு மாற்றலாகி சென்றாலோ அல்லது சிலிண்டர் தேவையில்லை என்ற நினைத்தாலோ சிலிண்டரை விற்பனை நிலையத்திலேயே திருப்பி தரலாம். 5 வருடங்களில் திருப்பித் தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பி தரப்படும். இதுவே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி தந்தால் 100 ரூபாய் திருப்பி தரப்படும்.
இந்நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், எல்பிஜிக்கான நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடிஎல்) திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், கடந்த 21 மே 2022 முதல், ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவித்திருந்தது. இந்த மானியம், வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.
ஆனால், கடந்த 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் ரூ.200 மானியத்துடன் எரிவாயு சிலிண்டர்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புள்ளி விவரங்களின்படி, இந்த திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர். 2020-21 முதல் 2022-23 வரை, எல்பிஜி விலைகளுக்கான சர்வதேச அளவுகோலான சவுதி CP, ஒரு MTக்கு 415-ல் இருந்து 712 ஆக அதிகரித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது..?
* https://www.pmuy.gov.in/index.aspx?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.
* அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்.
தகுதிகள் : பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால், இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.