தமிழகத்தின் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், இன்று (மார்ச் 17) கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுப முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் அதிக எண்ணிக்கையான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு:
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு, வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும்.
இரண்டு சார்பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 முக்கிய அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்கள் வழங்கப்படும்.
கூடுதலாக, 12 தட்கல் (Tatkal) டோக்கன்களுக்கு இணையாக மேலும் 4 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் தங்களின் பத்திரப்பதிவுகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More: இன்று முதல் 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு முகாம்…!