fbpx

’விஜயகாந்த் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி’..!! நடிகர் சூர்யா கண்ணீர் மல்க பேட்டி..!!

விஜயகாந்த் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி நடக்கும் என்று நம்புகிறேன் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த பல நடிகர்கள் வருகை தருகின்றனர். நேற்று நடிகர் கார்த்தி, அவரது தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பெரியண்ணா படப்பிடிப்பு தளத்தில் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். விஜயகாந்த் மறைவு ஈடு செய்ய முடியாதது. இறுதி அஞ்சலியில் நான் அவரை பார்க்க முடியாதது பெரிய இழப்பு. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் விஜயகாந்துக்கு பெரிய பங்கு உள்ளது. அனைவரும் கோரிக்கை விடுத்தது போல் அவருக்கு மணிமண்டபம், சிலை அமைப்பது மற்றும் நடிகர் சங்க கட்டடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் அவருடன் இருந்த நாட்களில் சகோதரன் போல் உரிமையாக பேசியது மறக்கவே முடியாது. அவர் கற்றுக் கொண்டதை இப்போது வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். கை வைத்த நாற்காலியில் அமர வேண்டாம். கட்டை நாற்காலியில் அமருங்கள் என்று சொன்னது போல் அவர் ஞாபகமாக இன்று வரை எந்த படப்பிடிப்பு என்றாலும் அது போன்ற நாற்காலி இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் உங்களிடம் பழக ஒரு தடை இருக்கும் அதை உடைத்தவர்.

அவர் பெயரை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது போல் நல்ல செய்தி நடக்கும், விரைவில் அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவரின் தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

விஜயகாந்துடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்..? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..?

Fri Jan 5 , 2024
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர்கள் மதுரையில் வசிப்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் என்ன தொழில் செய்து வருகிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்துடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள், 5 சகோதரிகள் என மொத்தம் 11 பேர். விஜயகாந்தின் மூத்த அண்ணன் பெயர் நாகராஜ். அடுத்தது 2-வது பிள்ளையாக விஜயராஜ் என்ற விஜயகாந்த். இவருக்கு அடுத்தப்படியாக தான் செல்வராஜ், ராம்ராஜ், பிரித்விராஜ், விஜயலட்சுமி, சித்ரா, திருமலாதேவி, சாந்தி […]

You May Like