fbpx

குட் நியூஸ்: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு…!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விலையின்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

Kathir

Next Post

சர்க்கரை நோய் இருந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

Wed May 1 , 2024
முன்பெல்லாம் மாரடைப்பு(Heart Attack) பற்றி எப்போதாவது ஒருமுறை கேள்வி படுவோம். அதுவும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்ததை பார்த்திருப்போம். ஆனால், இப்போதெல்லாம் இளம் வயதிலேயே மாரடைப்பு மரணங்கள் நம்மை கதிகலங்க வைக்கிறது. இதில், நீரிழிவு நோய் இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம், மேலும் அவர்கள் இளம் வயதிலேயே இந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். நீரிழிவு […]

You May Like