fbpx

குட் நியூஸ்..!! திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ்..!! இவ்வளவு பெரிய தொகையா..? தலைமை போட்ட ஆர்டர்..!!

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை தீபாவளி போனஸ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது, இதேபோன்ற ஏற்பாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் நடந்தது. தற்போது அவர் சிறையில் உள்ளதால், சில பல லட்டுகளாவது கிடைத்தால் கூட பரவாயில்லை என்று எண்ணியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ்களே சென்றுள்ளதாம்.

திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாம். இந்த தொகையானது மாவட்ட செயலாளர்கள் மூலம் விநியோகிக்க திட்டமிட்டு அப்பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிள், வாக்குச்சாவடி கமிட்டி என ரூ.5,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை தீபாவளி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன. கட்சி மேலிடம் வழங்கிய தொகையுடன் சேர்த்து அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் தங்களது கைகளில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேர்த்து வழங்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்பதால், அமைச்சர்களுக்கு பதிலாக சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களே ஒரு தொகையை சேர்த்து வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்று முதல் ரூ.1,000 உரிமைத்தொகை..!! உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா..?

Thu Nov 9 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வரை முதல் முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். தீபாவளி பண்டிகை […]

You May Like