fbpx

குட் நியூஸ்..!! ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்திருந்தது. பொதுமக்களின் வசதிக்காக, மை ஆதார் போர்ட்டல் வழியாக, ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான அவகாசம் செப்.14ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 14ஆம் தேதி வரை மை ஆதார் போர்ட்டலில் ஆதார் தகவல்களை எளிதாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?

* முதலில் https://myaadhaar.uidai.gov.in/ இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்

* அடுத்ததாக, லாக் இன் செய்து, பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்கவும்.

* அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர், முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்ற வேண்டும்.

* ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் (எஸ்.ஆர்.என்) குறுஞ்செய்தியாக வரும்.

* ஆதார் அப்டேட் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள 1947 என்ற டோல்ப்ரீ எண்ணுக்கு அழைக்கலாம்.

Chella

Next Post

கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணம்!… இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதுதான்!… உண்மை என்ன?

Fri Sep 8 , 2023
வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். இதுகுறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்ளலாம். ஆரோக்கியமான உணவை நோக்கி நகரும்போது பழங்கள் எப்போதும் பரிந்துரைக்கப்படுகின்றன. சில சமயங்களில் வாழைப்பழங்களில் அதிக கலோரிகள் இருக்கலாம் மற்றும் அது கொழுப்பை உண்டாக்கும் என்று மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இருப்பினும், இன்றுவரை, வாழைப்பழம் உடலின் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எவ்வாறு சரியாகப் பாதிக்கிறது என்ற கூற்றை உறுதிப்படுத்த எந்த ஆய்வுகளும் இல்லை […]

You May Like