fbpx

குட் நியூஸ்..!! விவசாயிகளே புதிய மின் இணைப்பு வேண்டுமா..? உடனே இதை பண்ணுங்க..!!

தமிழ்நாடு முழுவதும் 5,000 எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சூரியசக்தி (சோலார்) மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதம மந்திரியின் குசம் திட்டத்தின் கீழ் சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. மின்பளு உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 5,000 எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின் தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 50 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டம், சுயநிதி திட்டம் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 மற்றும் சாதாரண முன்னுரிமை திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்துக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு..!! அக்.18ஆம் தேதியே வெளியாகிறது ’லியோ’..!!

Sun Oct 8 , 2023
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், ஒரு சில விஜய் ரசிகர்கள் பெங்களூரு, […]

You May Like