fbpx

மக்களே குட் நியூஸ்..!! இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு..!! இன்று எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000 வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று, இந்த எண்ணிக்கை 7,000 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 29 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இந்த தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம்..!! போக்குவரத்துக் கழக சம்மேளனம் அறிவிப்பு

Tue Apr 18 , 2023
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் சிஐடியூ-வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஒன்றாகவும், ஆனால், அரசு நடந்துகொள்வது வேறுவிதமாகவும் இருக்கிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வைப்பு […]

You May Like