fbpx

Rain | மக்களே குட் நியூஸ்..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் தகவல்..!!

தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 3ஆம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39 டிகிரி – 41 செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி – 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி – 37டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ’சீமான் அண்ணன் தான் என்னுடைய ஸ்லீப்பர் செல்’..!! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!

Chella

Next Post

Sania Mirza | காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் சானியா மிர்சா..? எந்த தொகுதியில் தெரியுமா..?

Tue Apr 2 , 2024
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, […]

You May Like