தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 1ம் வகுப்பிலேயே அதிக புத்தகத்தை சுமந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை 4 பருவமாக பிரித்து இருக்கிறது.
அதன்படி முதல் பருவத்திற்கான பாடங்கள் எல்லாம் ஒரே புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது இதன் காரணமாக, மாணவர்கள் மொத்தமாக ஒரு புத்தகம் மற்றும் ஒரு நோட்டு புத்தகம் மட்டுமே பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றால் போதுமானது. இதனால் மாணவர்களுடைய புத்தக சுமை குறைந்துவிட்டது அந்த மாநிலத்தில் புதிய கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.