fbpx

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!… இனி எல்லாம் இலவசம்!… UIDAI அறிவிப்பு!

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு பல சலுகைகள் உண்டு. அதிலும் நம் அடையாளங்களுக்கான ஆவணங்களில் ஆதார் கார்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிகளில் லோன் வாங்குவது என ஆதார் கார்டு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அனைத்து ஆதார் எண் வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக UIDAI அமைப்பும் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளும் காலக்கெடு ஜூன் 14 ஆக இருந்த நிலையில் மீண்டும் நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி மக்கள் தங்கள் ஆதார் ஆவணங்களை எந்த கட்டணமும் இன்றி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை புதுப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையை புதுப்பிக்க நினைத்தால் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை புதுப்பிக்க நினைத்தால் உங்களுக்கு இரண்டு ஆஃப்சன்ஸ் உண்டு. ஒன்று நீங்களே ஆன்லைன் புதுப்பிப்பு சேவையைப் பயன்படுத்தி மாற்றங்கள் செய்யலாம் அல்லது உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகியும் மாற்றங்களைச் செய்யலாம். UIDAI இணையதளத்தில் உங்கள் ஆதார் அட்டையின் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதியை இலவசமாகப் புதுப்பிப்பது எப்படி என்பது இங்கே பார்க்கலாம்.

படி 1: https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழைக, படி 2: ‘ஆவண புதுப்பிப்பு’ என்பதைத் தேர்ந்தெடுத்து விருப்பத்தை கிளிக் செய்யவும். உங்களின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும். படி 3: விவரங்களைச் சரிபார்த்து, அடுத்த ஹைப்பர்லிங்கில் கிளிக் செய்யவும். படி 4: கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்வு செய்யவும். படி 5: ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றி பணம் செலுத்த தொடரவும்.

Kokila

Next Post

உங்களுக்கு வருமான வரி அறிவிப்பு வந்ததா?… நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Thu Aug 3 , 2023
வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக வரித் துறையிடம் இருந்து ஒருவர் நோட்டீஸ் பெறலாம். வருமான வரித்துறை (ஐ-டி) சமீபத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளின் மதிப்பீடு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புகளில், 50 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் வாங்குபவர்களை மட்டுமே கவனத்தில் […]

You May Like