fbpx

பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்..!! அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா..? அட இந்த பிரபல நடிகையா..?

இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. தமிழில் பிக்பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தவறை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது.

இந்நிலையில் தான், இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகமாக இருப்பதால், பிக்பாஸ் தொடரில் இருந்து சிறிய ஓய்வு எடுப்பதாக அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளருக்கு நடிகை நயன்தாராவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி வெறும் வதந்திதானா? அல்லது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More : வங்கதேசத்துக்கு புதிய பிரதமர்..? பழிக்கு பழி..!! யார் இந்த முகமது யூனுஸ்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Expectations have arisen among the fans as to who will host the Bigg Boss show instead of Kamal Haasan.

Chella

Next Post

சம்பளம் வந்ததுமே காலியாயிடுதா? இந்த ஃபார்முலா யூஸ் பண்ணி பாருங்க..!!

Thu Aug 8 , 2024
Does money disappear as soon as it comes into your hands? Do your pockets get empty as soon as the month starts? This formula will take away all your tension

You May Like