மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான், ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, மத்திய அரசின் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் என்று அதிகரிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய அரசு கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் எண்ணிக்கையின் படி, ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி மதிப்பாய்வு செய்து அதிகரிக்கிறது. ஏ.ஐ.சி.பி.ஐ குறியீட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வருடத்திற்கு, இரண்டு முறை அகவிலைப்படி மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதிகரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தொடர்ந்து, மூன்றாவது முறையாக, நான்கு சதவீதமாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அது 42 இல் இருந்து 46 சதவீதம் வரையில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த முறை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? என்பது அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பின்னர் தான் தெரியவரும். ஏனென்றால், அரசின் முடிவு தான் இறுதியானது என்று கூறப்படுகிறது அமைச்சரவையில் ஒப்புதல் கிடைப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த முறை அகவிலைப்படி நான்கு சதவீதமாக இருந்தால், அது 46 சதவீதமாக அதிகரிக்கும். மத்திய அரசு அதன் ஊழியர்களின் சம்பளம் 8000 ரூபாய் என்று இருந்தால், 27 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தான், இந்த வருடத்திற்கான அகவிலைப்படி எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில், அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. கடைசியாக அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத கால சராசரியின் சதவீதம் அதிகரிப்பின் அடிப்படையில், மத்திய அரசு அப்போது அகவிலைப்படி நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.