fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! நீங்கள் எதிர்பார்த்தது வந்தாச்சு..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கப்போகிறது. இந்த செய்தியானது ஊழியர்களின் பணப்பையை நிரப்ப போகிறது. ஏனென்றால், மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை பெரிய அளவில் உயர்த்தப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தியதன் மூலம் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% அதிகரித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! நீங்கள் எதிர்பார்த்தது வந்தாச்சு..!!

செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு முன்னர் வரை மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வந்தனர். கொரோனா பரவல் சமயத்தில் பல துறைகளில் ஏற்பட்ட முடக்கத்தின் காரணமாக அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும் அரசு வழங்கவில்லை. இதன் நிலுவைத் தொகையும் இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாகவே தங்களது 18 மாத நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! நீங்கள் எதிர்பார்த்தது வந்தாச்சு..!!

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை வீதத்தில், அதாவது ஜனவரியிலும் பின்னர் ஜூலையிலும் என இரண்டு முறை திருத்தங்களை மேற்கொள்ளும். தற்போது புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த சந்தோஷமான சமயத்தில் ஊழியர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யும் வகையில் அரசு அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. மார்ச் 2023-க்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

மொபைலில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும்..!! எச்சரிக்கை

Tue Dec 20 , 2022
வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படங்களை பார்ப்பதால், என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள். மனிதனின் 6-வது விரலாக மாறிவிட்டது ஸ்மார்ட் போன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இன்று செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு அடிமையாக மாற்றிவிட்டது தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும். ஸ்மார்ட் போன்களின் அதிகளவு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம் […]

You May Like