ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 7.75 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகித விவரங்கள்…
7 – 14 நாட்கள் : 3.50%
15 – 29 நாட்கள் : 3.50%
30 – 45 நாட்கள் : 3.50%
46 – 90 நாட்கள் : 4.50%
180 – 270 நாட்கள் : 5.50%
271 நாட்கள் – ஒரு ஆண்டு : 5.80%
1 ஆண்டு : 6.80%
1 ஆண்டு – 665 நாட்கள் : 6.80%
666 நாட்கள் : 7.25%
667 நாட்கள் – இரண்டு ஆண்டு : 6.80%
2 ஆண்டு – மூன்று ஆண்டு : 7%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.50%
5 ஆண்டு – 10 ஆண்டு : 6.50%