fbpx

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! பிப்.24ஆம் தேதி ரூ.2,000..!! மத்திய அரசு முக்கிய தகவல்..!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 13-வது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகையை விவசாயிகளின் கணக்கில் செலுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இம்மாதம் 24 ஆம் தேதி விவசாயிகள் கணக்கில் ரூ.2,000 பணம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், EKYC பூர்த்தி செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் மட்டுமே இந்த பணம் டெபாசிட் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

அடுத்த ஷாக்கிங்..!! ஃபேஸ்புக் ’ப்ளு டிக்’கிற்கும் இனி கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..? மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

Mon Feb 20 , 2023
ட்விட்டரை அடுத்து ஃபேஸ்புக் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். ஒருவருவருடைய அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான் என்பதை […]
அடுத்த ஷாக்கிங்..!! ஃபேஸ்புக் ’ப்ளு டிக்’கிற்கும் இனி கட்டணம்..!! எவ்வளவு தெரியுமா..? மெட்டா நிறுவனம் அறிவிப்பு..!!

You May Like