காவிரியில் இருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் காவிரி டெல்டாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியிருக்கின்றனர்.
பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 21ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் பயிர்க்காப்பீடு செய்யும் மையங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.