fbpx

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

”விவசாயிகளின் நலன் கருதி 2024-25ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை கூடுதலாக வழங்கப்படும்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2024-25ஆம் ஆண்டு காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 105 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்று 2,405 ரூபாய்க்கும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்று 2,450 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும்.

இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்து வரும் 2025-26ஆம் நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்..!! பணத்தை இழந்த வாலிபர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை..!!

English Summary

“For the benefit of the farmers, an additional incentive of Rs. 105 per quintal of paddy will be given in 2024-25 along with the minimum reference price for paddy,” Chief Minister Stalin has announced.

Chella

Next Post

ரசிகர்களுக்கு செம விருந்து..!! ’மகாராஜா’ திரைப்பட ஓடிடி தேதி அறிவிப்பு..!!

Wed Jun 26 , 2024
Maharaja movie will be released on 1st July on Netflix OTD platform.

You May Like