விவசாயிகளுக்காக, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய நிலையில், இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை அரசு 16 தவணைகளாக பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. அந்த வகையில், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.32,000 செலுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் 16-வது தவணை பணம் செலுத்தியது. இதையடுத்து, 17-வது தவணை பணம் எப்போது வங்கிக் கணக்கிற்கு வரும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
17-வது தவணை எப்போது செலுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் 17-வது தவணை பணம் செலுத்தப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. அதன்படி, ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read More : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடிகர் விஜய் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..? தீயாய் பரவும் செய்தி..!!