தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியிலிருந்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதோடு, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக ஒரு வருடத்திற்கு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.