சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையால் மக்கள் கவலையில் இருந்தனர், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையாக இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5735 க்கும், சவரனுக்கு ரூ.45,880க்கு விற்கப்பட்து வந்த நிலையில் தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5715க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720க்கு விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, ரூ.78.20க்கும், ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து ரூ.78,200க்கும் விற்பனையாகிறது.