உலகெங்கும் இருக்கும் கிரிகெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருக்கிறது. 2008இல் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது, அது இவ்வளவு பெரியளவில் வெற்றியடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 15 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது. ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டி வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. வழக்கம் போல், நடப்பு சாம்பியன் முதல் போட்டியில் இறங்குகிறது. கடந்த முறை கோப்பை வென்ற ஹர்திக் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடங்க உள்ளதை முன்னிட்டு 198 ரூபாய் Broad Band திட்டத்தினை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சிறிய தொகைக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால், இந்த வசதி வெறும் 10 MBPS அளவிற்கு தான் கிடைக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே நிறுவனம் 30 MBPS வேகம் கொண்ட இன்டர்நெட்டை 399 ரூபாய்க்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.