fbpx

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! இனி அரை நிமிடம் கூட சுங்கச்சாவடிகளில் காத்திருக்க தேவையில்லை..!! சூப்பர் திட்டம்..!!

நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சலைகளிலும் சுங்கச்சவாடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது பாஸ்டேக் இல்லாத வாகனங்களே இல்லை. பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்து வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்கின்றன.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் ‘பாஸ்ட்டேக்’ முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாக குறைந்துள்ளது. அதை 30 வினாடிகளுக்கு கீழே குறைக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக மத்திய அரசு தடையில்லாத சுங்க வசூல் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் அரை நிமிடம் கூட காத்திருக்க வேண்டியதில்லை. தடையில்லாத சுங்க வசூல்முறை இப்போது டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

இதுபற்றி விரிவாக விவரித்த அமைச்சர் விகே சிங், செயற்கைகோள் மற்றும் கேமரா அடிப்படையில் தடையில்லா சுங்க வசூல்முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உங்கள் வாகனம், ஒரு நெடுஞ்சாலையில் நுழைந்ததுமே அதன் பதிவெண், அங்குள்ள கேமராவால் ‘ஸ்கேன்’ செய்து தகல்களை தொகுத்துவிடும். பின்னர் உங்கள் வாகனம் எத்தனை கி.மீ. பயணித்துள்ளதோ, அந்த தூரத்துக்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறையால், சுங்க கட்டண வசூல் திறன் மிகவும் அதிகரிக்கும், வாகனங்களின் பயண நேரம் குறையும்.

டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த புதிய நடைமுறை அங்கு வெற்றியடைந்தால், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மத்திய அரசு தொலைத்தொடர்பு துறையில் ஏற்பத்திய கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாகவே இப்படியான நவீன முறைகளை செயல்படுத்த முடிகிறது” என்றார்.

Chella

Next Post

தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ..!

Thu Aug 3 , 2023
பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார்.  பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். உயர் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 25 பேருக்கு […]

You May Like