fbpx

வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..!! மத்திய அரசு முடிவு..!!

நாட்டில் கடந்த 592 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் ச்வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 பணம்..!! தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

Wed Jan 3 , 2024
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அரிசி, சர்க்கரையுடன் கரும்பு, நெய் உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு எதிர்வரும் பொங்கலுக்கு தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசுத் […]

You May Like