விரைவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ஜூன் 2022இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனாலைக் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. தற்போது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது என்று கூறினார்.

இந்நிலையில், இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும், இதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு 54 ஆயிரத்து 894 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பெட்ரோல் விலையும் குறையும். தொடர்ந்து எத்தனால் அளவு அதிகரிக்கப்பட்டால், பெட்ரோல் விலை கணிசமான அளவு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.