fbpx

புதிய அப்டேட்… ஓய்வூதியம் தொடர்பாக சிக்கலா…? இந்த எண்ணுக்கு கால் செய்தால் போதும்…!

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம்.

அதற்கான சில கட்டணமில்லா எண்கள் மற்றும் குரல் அஞ்சல் சேவைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை தீர்க்க அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தனது அறிவிப்பில்; ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பிரச்சினைகளை முதன்மைக் கணக்காளர் பொது அலுவலகத்தில் எளிதாகப் பதிவு செய்யலாம். கட்டணமில்லா எண் 1800-2200-14 என்ற எண் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். குரல் அஞ்சல் சேவை பெற 020-71177775 என்ற என் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

நெருங்கும் தேர்தல்... கட்சியின் சின்னம் அதிரடியாக முடக்கம்...! தேர்தல் ஆணையம் கொடுத்த ட்விஸ்ட்...!

Sun Oct 9 , 2022
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் ‘சிவசேனா’வுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

You May Like