fbpx

மக்களுக்கு குட் நியூஸ்.. இனி இதுவும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்..!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகலீல் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட 1 கிலோ அரிசி, 100 கிலோ அரசியில் சேர்த்து கொடுக்கப்படும்.

மேலும், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும். கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளது. நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்

Kathir

Next Post

காத்துவாங்க போன காதலர்கள்..!! கத்தி முனையில் 3 பேர் செய்த சம்பவம்..!! நீலாங்கரையில் பரபரப்பு

Tue Dec 20 , 2022
கடற்கரையில் இரவில் தனிமையில் இருந்த காதலர்களை கத்தி முனையில் மிரட்டி போன்-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் (25) என்பவர், கடந்த 14ஆம் தேதி இரவு நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் அருகே உள்ள கடற்கரையில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி காதலர்கள் வைத்திருந்த பையை சோதித்து […]

You May Like