fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!! இனி தாமதமே ஆகாது..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை தந்து வருகிறது. எனவே, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கே நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே, பொருட்கள் வழங்கப்படும் என்றும், கைரேகை பதிவு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார். அரசு ஒதுக்கீடு செய்யும் பொருட்களை எவ்வித தாமதமும் இன்றி, மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்கவும், பொருட்கள் இருப்பு விவரங்களை அறியும் வகையில், தினமும் பலகையில் எழுதவும் அறிவுறுத்தியுள்ளார்.

Read More : உயிரைப் பறிக்கும் ’Non Stick’ பாத்திரங்கள்..!! உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் ICMR..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Sun May 19 , 2024
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் […]

You May Like