fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! மின் கட்டணத்தில் தள்ளுபடி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டையுடன் கூடிய 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே 2 பாட்டில் கடுகு எண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் மீதமுள்ள பயனாளிகளுக்கு கிடைக்காது. அதற்கு பதிலாக வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் கடுகு எண்ணெய் வழங்கப்படும் என மாவட்ட உணவு வழங்கல் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டுமே இந்த கடுகு எண்ணெய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குடும்ப அடையாள அட்டையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இனி மின் கட்டணத்திலும் தள்ளுபடி வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

Chella

Next Post

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா..? நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

Tue Sep 12 , 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜன.14ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜன.15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை […]

You May Like