தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் வர இருப்பதால் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி (23,24) பண்டிகைகள் வருவதால், இன்றைய தினமான சனிக்கிழமை பெரும்பாலான மாணவர்களுக்கு விடுமுறை, மேலும் நாளை ஞாயிறு என்பதால், இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 25 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன அவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 25 முதல், 27ம் தேதி வரை, ஒன்பது, 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.