fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிப்பு..!! வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ஆம் தேதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகவும் சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். காலாண்டுக்காக தனியாக விடுமுறை இல்லாமல் வழக்கமான விடுமுறை நாட்களில் டுமுறை வருகிறது என்று மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்குமான NSS சிறப்பு முகாம், காலாண்டு தேர்வு விடுமுறையின் ஏழு நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.95,000 கொடுத்தால் போதுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Mon Sep 25 , 2023
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்த கழகத்தின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். ஜூனியர் டெக்னீசியன் : இந்த பணிக்கு மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். லேப் அசிஸ்டென்ட், கெமிக்கல் பிளான்ட் ஆப்பரேட்டர், […]

You May Like