fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..? ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு..!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். விடுமுறை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை செயல்படாது. அந்த நாளை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 19ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் ஆக.3ல் உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதே காரணத்திற்காக ஈரோடு, சேலம் மாவட்டத்திலும் ஆக.3 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்…..! கண்டெய்னரில் பாதுகாத்து வைத்திருக்கும் ஒடிசா மாநில அரசு….!

Wed Aug 2 , 2023
கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது பலர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான இந்த விபத்தில் காயம் அடைந்தனர். மாபெரும் இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் சுமார் 287 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதோடு, 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். பின்பு […]

You May Like