fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நாளை மறுதினம் ஜூன் 7ஆம் தேதி பள்ளியானது திறக்கப்படவுள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்திருந்தனர். எனவே, பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலன் வெட்டிப் படுகொலை..!! பெண்ணின் தந்தை வெறிச்செயல்..!!

Mon Jun 5 , 2023
கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற சென்ற காதலனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு பிரசாந்த் தனது […]

You May Like