fbpx

”டீ பிரியர்களுக்கு இன்ப செய்தி”..! அதிகளவு டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமாம்..! ஆய்வில் தகவல்

‘டீ’ அதிக அளவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அனைத்து தரப்பினர் வாழ்விலும் தேநீர் என்பது மிக முக்கியமான அங்கமாகவே இருந்து வருகிறது. தேநீர் குடித்தவுடன் மனம் புத்துணர்வு பெறுகிறது, சுறு சுறுப்பாக மாறுகிறோம். ஆனால், அதிக அளவு தேநீர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மை-தீமை குறித்து ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவில், அதிகளவு தேயிலை அருந்துவது இறப்பின் அபாயத்தை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”டீ பிரியர்களுக்கு இன்ப செய்தி”..! அதிகளவு டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமாம்..! ஆய்வில் தகவல்

தேநீர் அருந்தாதவர்களை ஒப்பிடும்போது இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் அருந்துபவர்களுக்கு 9-3 வரை இறப்பு சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 4,98,043 ஆண்களும், பெண்களும் பங்கேற்றுள்ளனர். அதில், 89 சதவீதம் பேர் பிளாக் டீ குடிப்பவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வு கிரீன் டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்துகிறது.

”டீ பிரியர்களுக்கு இன்ப செய்தி”..! அதிகளவு டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமாம்..! ஆய்வில் தகவல்

இருப்பினும் தேநீர் அதிக அளவு அருந்துவதால் குறிப்பாக பிளாக் டீ அதிக அளவில் உட்கொள்வது மக்களின் இறப்பு அதிகரிக்கிறது என அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேநீர், பால் மற்றும் காபி அருந்துவது மரபணு வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதில்லை எனவும் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.. இந்த நிபந்தனையுடன்...

Thu Sep 1 , 2022
கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.. சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் கடந்த மாதம் 15-ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் ஜாமீன் கோரி, எழும்பூர் நீதிமன்றம், முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், […]
பெரியார் சிலை விவகாரம்..! கனல் கண்ணனுக்கு வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

You May Like