fbpx

விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… 5 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

நாடுமுழுவதும் 2023-24ம் குறுவை சந்தை பருவத்தில் 5.21 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023-24ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான கொள்முதல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று மாநில உணவு செயலாளர்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதில், 2023-24 கரீஃப் சந்தைப் பருவ காலத்தில் 521.27 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு மதிப்பீடுகளான 518 லட்சம் மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது முந்தைய 2022-23 கரீஃப் சந்தைப் பருவ காலத்தில் 496 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. சத்தீஸ்கர் (61 எல்எம்டி) மற்றும் தெலங்கானா (50 எல்எம்டி), ஒடிசா (44.28 எல்எம்டி), உத்தரப் பிரதேசம் (44 எல்எம்டி), ஹரியானா (40 எல்எம்டி), மத்தியப் பிரதேசம் (34 எல்எம்டி), பீகார் (30 எல்எம்டி), ஆந்திரப் பிரதேசம் (25 எல்எம்டி), மேற்கு வங்கம் (24 எல்எம்டி) மற்றும் தமிழ்நாடு (15 எல்எம்டி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2023-24ஆம் ஆண்டில் 33.09 லட்சம் மெட்ரிக் டன் சிறு தானியங்கள் மாநிலங்களால் கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23ஆம் ஆண்டில் 7.37 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகள் வரை 6 சிறு தானியங்களை கேழ்வரகின் குறைந்தபட்ச ஆதார விலையில் மாநிலங்கள் கொள்முதல் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ATM-ல் எளிதாக பணம் எடுக்கலாம்!… எப்படி தெரியுமா?

Fri Aug 25 , 2023
இனி ATM-களில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை. இந்த புதிய சேவையை முதல் முறையாக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளும், inter-operable cardless cash withdrawal என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தங்களின் ATM-களுக்குள் கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் அம்சத்தை வழங்கியிருக்கிறார்கள். இப்போது இதைப் பற்றிய தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, […]

You May Like