இன்றுமுதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதிகளிலும் மின் தடை செய்யப்படாது என்று மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்குநாள் மின்தேவை அதிகரித்து வரும் நிலையிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.. இதற்கு காரணம், கடந்த வருடம் அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை. அதேபோல, மின்தடையும் பெரிதாக ஏற்படாமல், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபடியே உள்ளது.. இதற்காக மின்வாரிய ஊழியர்களுக்கு பிரத்யேக உத்தரவும், அறிவுறுத்தலும் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டே வருகிறது.
தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும், நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் மின்துறை கூறிவருகிறது.. அதுமட்டுமல்ல, அடிக்கடி மின் தடை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக பணியாளர்களை டிரான்ஸ்வர் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.
அதுமட்டுமல்ல, மின்வாரியத்தின் இயந்திரங்களில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் பயன்பாடு இருப்பதால், அதிக வெப்பநிலை மற்றும் கோளாறு காரணமாக மின்விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.. இவற்றை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு போதிய இடைவெளியில் முறையாக மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற வெப்சைட்டிற்கு சென்றால், உங்கள் மாவட்டம் அல்லது உங்கள் பகுதியை செலக்ட் செய்தால் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை எப்போது ஏற்படும் எந்த நாளில் ஏற்படும் எவ்வளவு நேரம் ஏற்படும் என்பதை உங்களால் அறிய முடியும்.
இந்தநிலையில் தமிழகத்தின் மாவட்டங்களில் வரும் நாட்களுக்கான மின்தடை குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய 3 நாட்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படாது என்று மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இளைஞர்களே… இன்று காலை 8 முதல் மாலை 3 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!