மூத்த குடிமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சில புதிய விதிகளை அவர்களுக்காக உருவாக்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் இதற்காக, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, IRCTC மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு விதியை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது IRCTC மற்றும் பிற ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் கிடைக்கிறது. இதன் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
குடும்ப பயணத்தின்போது கீழ் படுக்கை
ஒரு குரும்பமே ஒன்றாக ரயிலில் பயணிக்கிறீர்கள் என்றால், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை சீனியர் சிட்டிசன் முன்பதிவு என்ற ஆப்சனில் தனித்தனியாக முன்பதிவு செய்தால், மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் ஒன்றாக டிக்கெட் புக் செய்யும்போது கீழ் படுக்கைகள் ரிசர்வேசனின் கீழ் கிடைப்பதில்லை.
மூத்த குடிமக்களின் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முன் அவர்களின் வயதை குறிப்பிடுவது அவசியமாகும். பண்டிகை காலங்களில் இருக்கை பெறுவது ஒரு பெரிய விஷயம். எனவே, மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம் பயணத்திற்கு முன்பாக 15 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். ஏசி வகுப்பை விட ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிக இருக்கைகள் உள்ளன,
மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள்..?
ரயில் பயணத்தின் போது மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கிறது. முன்பதிவு செய்யும் போது கீழ் பெர்த் வேண்டும் என குறிப்பிடலாம். டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என்றாலும், அருகில் உள்ளவர்களிடம் கேட்டு கீழ் பெர்த் பெற்றுக் கொள்ளலாம். ரயில் டிக்கெட் பரிசோதகரிடமும் கோரிக்கை வைக்கலாம்.