மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது.
உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க் ஆக இருக்கும் இந்தியன் ரயில்வே ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். அந்தவகையில் பலருக்கு டிக்கெட் சலுகையின் பலனை ரயில்வே வழங்கி வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது. இவர்களுக்கு பொது வகுப்பு முதல் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசி வரையிலான டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கும். இவர்கள் டிக்கெட்டுகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறுகிறார்கள்.
இது தவிர, இந்த பயணிகள் ஏசி முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்தால், அந்த நபர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே நேரத்தில், ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். வாய் பேச முடியாத, காது கேளாத நபர்களுக்கு ரயிலில் 50 சதவீத சலுகை கிடைக்கும் என ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இது தவிர, அத்தகைய பயணிகளுடன் பயணிக்கும் நபர்களுக்கும் (எஸ்கார்ட்) ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடியின் பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது. புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டோமி நோயாளிகள், இரத்த சோகை, அப்லாஸ்டிக் அனீமியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சலுகைகல் வழங்கப்படுகின்றன.