முதல் முறையாக பார்லி வகை தானியங்கள் மூலம் தமிழ்நாட்டில் பீர் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருகிறது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மி.லி, 375 மி.லி அளவுகளில் கிடைக்கும். பீர் பிரியர்களின் மத்தியில் சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற நல்ல வரவேற்பை பெறும் என டாஸ்மாக் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.
650 மி.லி ரூ. 200-க்கும் 325 மி.லி ரூ.100-க்கும் கிடைக்கும். சிறிய வகை டின்களில் இந்த வகை பீர் கிடைக்கும் என்றும், சில நாட்களில் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மது பிரியர்களுக்கு பொதுவாக பீர் என்றாலே அலாதியான ஆர்வம் ஏற்படும்.
எந்த வகை பீர் விற்பனைக்கு வந்தாலும் அதை உடனே வாங்கி ருசித்து பார்த்து விடுவார்கள். அவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தான், தற்போது தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பீர் விற்பனைக்கு வரப்போகிறது. இது டாஸ்மார்க் விற்பனையில் மேலும் ஒரு சாதனையைப் படைக்கும் என மது பிரியர்களும், டாஸ்மாக் நிர்வாகமும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.