சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.
இரு நகரங்களின் பயணதூரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் சென்னை – பெங்களூர் அதிவிரைவு சாலை. பொதுவாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம், ஆனால் இந்த சாலை பணிகள் முழுவதும் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் பெங்களூருவிற்கு சென்று விடலாம் என்று தெரிவிக்கப்டுகிறது. இந்த திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இருக்கும் இந்த சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த விரைவு சாலிகான் பாணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை மூலம் 2 மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சென்றுவிடலாம் என்று கூறினார். மேலும் பேசிய அவர் நாட்டின் வாகனம் பெருக்கம் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.