தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் (அக்டோபர் 24) தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எவ்வளவு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.